புகார் செய்ததால் மனைவியை குத்திய கணவர்

Webdunia
திங்கள், 23 மே 2016 (23:55 IST)
மதுரை மாவட்டத்தில் காவல்நிலையத்தில் புகார் செய்த மனைவியை, கணவர் கத்தியால் குத்தினார்.

 
மதுரை செல்லூரைச் சேர்ந்த மகேந்திரன், கலைச்செலவி ஆகிய இருவருக்கும் திருமணம் ஆகி 4 வருடங்களே ஆன நிலையில், சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் கலைச்செல்வி தன் அம்மா வீட்டுக்கு சென்றுள்ளார்.   
 
தன் அம்மா வீட்டிற்கும் வந்து தொடர்ந்து பிரச்சனை செய்ததால், கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளார். 
 
இதைத்தொடர்ந்து காவல் துறையினர் மகேந்திரனை அழைத்து கண்டித்துள்ளனர். பின்னர் சில வாரங்கள் கழித்து, மீண்டும் பிரச்சனை செய்துள்ளார்.
 
அதனால் கலைச்செல்வி மீண்டும் தல்லாகுளம் மகளிர் காவல்நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை சென்று மீண்டும் புகார் செய்துள்ளார்.  
 
காவல் துறையில் மீண்டும் அவரது மனைவி தன்மீது புகார் செய்ததை அறிந்த மகேந்திரன் பாலம் ஸ்டேசன் சாலையில் சென்றுகொண்டிருந்த கலைச்செல்வியிடம், தகராறில் ஈடுபட்டு, வாக்குவாதம் பெரிதாக மகேந்திரன் மறைத்து வைத்திருந்த கத்தியால் கலைச்செல்வியின் வயிற்றில் குத்தியுள்ளார். 
 
காயம் அடைந்த கலைச்செல்வி அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதையடுத்து  சம்பவம் தொடர்பாக முத்துச்செல்வி அளித்தப் புகாரின்பேரில், செல்லூர் காவல் துறையினர் மகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்