செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது ஏன்?

Sinoj

புதன், 28 பிப்ரவரி 2024 (18:19 IST)
முன்னாள் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது குறித்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால்  கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த பல மாதங்களாக ஜாமின் கிடைக்காமல் சிறையில் உள்ளார்.

அவரது ஜாமீன் மனு உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை சென்று விட்ட நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த போது இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. 
 
இந்த   நிலையில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது குறித்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
 
அதில், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலும், அரசியலில் செந்தில்பாலாஜி செல்வாக்கான  நபராகவே நீடிக்கிறார்.
 
அமைச்சர்  பதவியை ராஜினாமா செய்துவிட்டால் சாட்சிகளை கலைக்கமாட்டார் என்ற வாதத்தை ஏற்க முடியாது.
 
செந்தில் பாலாஜி குற்றம் புரியவில்லை என்பதற்கான நம்பத்தகுந்த காரணங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
 
இது திமுக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேலும், செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் மட்டும் போதாது ;அவர்  தன் எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும்  அப்போதுதான் ஜாமின் கிடைக்க வாய்ப்புள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்