கடலூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டிச்சாவடி பகுதியில் உள்ள காவல் நிலையத்தின் முன்பு, கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கொலை செய்யப்பட்ட ஒரு இளைஞனின் தலையை வெட்டி காவல் நிலையத்திற்குள் வீசி விட்டு சென்றனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிருந்தது. இந்த வீடியோ வெளியாகி தமிழகமெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், கொலை செய்யப்பட்ட இளைஞர் புதுச்சேரிக்கு அருகில் உள்ள பாகூரை சேர்ந்த சுவேதன்(17) என்பது தெரியவந்துள்ளது.
சுவேதனும், அவரின் நண்பர்கள் வினோத், தாஸ், சர்மா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து அந்த பகுதியில் சில கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதில், போலீசாரிடம் சிக்கிய சுவேதன், அவருடையை நண்பர்களை அடையாளம் காட்டி அவர்களை போலீசில் சிக்க வைத்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரின் நண்பர்கள் பினாச்சிக்குப்பம் பகுதியில் அவரைக் கொன்று, உடலை அங்கே போட்டுவிட்டு, தலையை மட்டும் காவல் நிலையத்தில் எரிந்துள்ளனர் என கூறப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் கைது செய்துள்ளனர். அவர்களிடன் நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டு வழக்கில் தங்களை காவல்துறையினரிடம் காட்டிக் கொடுத்ததற்காக சுவேதனை கொலை செய்ததாக இருவரும் ஒப்புக் கொண்டனர்.
புதுச்சேரி சிறையில் சாப்பாடு, அடிப்படை வசதிகள் மோசமாக இருக்கும். இதுவே கடலூர் சிறை என்றால் சிகரெட், கஞ்சா போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பதால் சுவேதன் தலையை, கடலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ரெட்டிச்சாவடி காவல் நிலையத்தில் வீசிச் சென்றோம் என அவர்கள் இருவரும் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.