ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது ஏன் ? நீதிமன்றம் கேள்வி
புதன், 22 மே 2019 (14:42 IST)
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரானவர்களை துன்புறுத்துவது ஏன் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
ஒருநபர் ஆணையம் விசாரிக்கும் சூழலில் போராட்டக்காரர்கள் சிலரை குற்றவாளிகள் என முடிவு செய்தது எப்படி என்று இன்று நீதிபதிகள் கேள்வி எழுப்புகின்றன.
ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் : ஆலையை மூடுவது அரசின்கொள்கை எனில் அதே கருத்தை கொண்டோரை துன்புறுத்துவது ஏன் என்று கேட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த போராட்டத்திற்கு விசாரணை என்ற பெயரில் தற்போதும் துன்புறுத்துவதாக் வழக்கு பதிவுசெய்வது ஏன் என்று கேட்டுள்ளது.
107, 111 பிரிவுகளில் கீழ் புதிதாக சம்மனும் அனுப்பக்கூடாது என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
மேலும் அரசின் நோக்கம் மக்களை பாதுகாப்பதா? அச்சுறுத்துவதா ? என்று உயர்நீதிமன்றக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த வருடம் இதே தினத்தன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் தன்னிச்சையாகப் போராட்டம் நடத்தியபோது வெடித்த கலவரத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.