பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களின் முதல்வர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வதும் நடந்து வரும் நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டில் மட்டும் அமலாக்கத்துறை சோதனை செய்யாதது ஏன் என்ற கேள்விக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களான ஜார்கண்ட்டில் ஹேமந்த் சோரன், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால், தெலுங்கானாவில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. ஆனால், தமிழக முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு மட்டும் ரெய்டு வரவில்லை என்றால் அதற்கு ஒரே காரணம் சரியாக கப்பம் கட்டி வருவது தான்.
இது மறைமுக உறவு கிடையாது; வெளிப்படையான கூட்டணி. மற்ற மாநில முதல்வர்களை எளிதில் சந்திக்காத பிரதமர், ஒரே நாளில் ஸ்டாலினை சந்திக்கிறார், உதயநிதியை சந்திக்கிறார்; இருவரும் சம்பந்தி போல் நடந்து கொள்கிறார்கள். அதிமுக கூட்டணியில் இருந்த போதே அக்கட்சியின் நிகழ்ச்சிக்கு வராத பாஜக, திமுக கூட்டணியில் இல்லாதபோதும் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார்கள்.
இதிலிருந்து பாஜகவுடன் நெருக்கமாக இருப்பது யார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே என்று சீமான் கூறினார். அவருடைய இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.