சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்: திமுக பின்வாங்கியது ஏன்?

வெள்ளி, 28 ஜூன் 2019 (21:53 IST)
சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியதும் அனைவரும் எதிர்பார்த்த ஒன்று சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக எப்படி எதிர்கொண்டு வெற்றி கொள்ள போகிறது என்பதுதான். மக்களவை தேர்தலில் நல்ல வெற்றியை பெற்றுள்ளதால் அதே உற்சாகத்துடன்  சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் திமுக வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்றே அனைவராலும் கணிக்கப்பட்டது.
 
ஆனால் இன்று காலை திடீரென சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை சட்டமன்றத்தில் வலியுறுத்த மாட்டோம் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது
 
சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது கிட்டத்தட்ட அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு சமம். இப்படி ஒரு வாய்ப்பை ஸ்டாலின் நழுவ விடுவதற்கு காரணம் என்ன?
 
இப்போதுள்ள எம்.எல்.ஏக்களின் அடிப்படையில் இப்படி ஒரு தீர்மானம் வந்தால் நிச்சயம் திமுகவுக்கு தோல்விதான் கிடைக்கும். மேலும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலரை இழுக்க முயற்சித்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது. அதுமட்டுமின்றி அதிமுக தரப்பில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் சிலர் விலை பேசப்பட்டிருப்பதாகவும் ஸ்டாலின் காதுக்கு செய்தி வந்ததால் இப்போதைக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் வேண்டாம் என்ற முடிவை ஸ்டாலின் எடுத்ததாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்