ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா.? ராதிகா சரத்குமார் காட்டம்..!

Senthil Velan

செவ்வாய், 14 மே 2024 (12:59 IST)
திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ள ராதிகா சரத்குமார், உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம்  கடுமையாக தண்டிக்கப்படனும் என காட்டமாக தெரிவித்துள்ளார்.
 
திமுகவில் உறுப்பினராக இருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேடை பேச்சுக்களில் ஆபாசமாக பேசுவதை வழக்கமாக கொண்டு இருந்தார். அவர் பேசும் பல கருத்துக்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தன.
 
முக்கியமாக எதிர்க்கட்சிகளில் இருக்கும் தலைவர்கள், அதிலும் பெண் தலைவர்கள் பற்றி மிக கடுமையான கருத்துக்களை, ஆபாசமான கருத்துக்களை இவர் தொடர்ச்சியாக பேசி வந்தார். இதையடுத்து அவர் கட்சியில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டார்.

பாஜகவை சேர்ந்த சில பெண் தலைவர்கள் பற்றி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தவறாக பேசிய நிலையில் அவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பின் அவர் விளக்கம் கொடுத்து, மன்னிப்பு கேட்ட பின் சில நாட்கள் கழித்து கட்சியில் சேர்க்கப்பட்டார்.
 
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் சரத்குமாரை விமர்சனம் செய்து பேசி இருந்தார். இரவு 2 மணிக்கு மனைவியை எழுப்பி பாஜகவில் இணைய போவதாக சரத் குமார் சமீபத்தில் பேட்டி கொடுத்தார். அதை கொச்சையாக விமர்சனம் செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையான சில வார்த்தைகளை கூறி பேசி இருந்தார். அவரது பேச்சுக்கு ராதிகா சரத்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

ALSO READ: பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல்..! 3-வது முறையாக வாரணாசியில் போட்டி..!!

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும் என குறிப்பிட்டுள்ளார். shame on திமுக என்று கூறி, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை ராதிகா சரத்குமார் டேக் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்