தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியா? ஓபிஎஸ்ஸா? மே 6 ல் ஆலோசனை!

செவ்வாய், 4 மே 2021 (07:48 IST)
தமிழகத்தில் 75 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள அதிமுகவின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களிலும், அதிமுக கூட்டணி 75 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. தனிப்பெரும்பாண்மை பெற்றுள்ள திமுக மே 7 ஆம் தேதி முதல் ஆட்சி அமைக்க உள்ளது. அதற்கான வேலைகள் இப்போது தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் எதிர்க்கட்சியாக அமரப்போகும் அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியா? அல்லது ஓ பன்னீர்செல்வமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிதான் இருப்பார் என சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக மே 6 ல் அதிமுக எம் எல் ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்