மேட்டூர் அரசு மருத்துவ மனையில் 16 பேரின் கண் பார்வை பறிபோன சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜிகே மணி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து, பாமக தலைவர் ஜிகே மணி வெளியிடுள்ள அறிக்கையில், மேட்டூர் அரசு மருத்துவ மனையில் எழை எளிய மக்கள் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். இதில் 16 பேரின் கண் பார்வை பறிபோன சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது.
ஒரு மனிதனுக்கு இன்றியமையாதது கண் ஆகும். கண் பார்வை இல்லையெனில் வெளி உலகத்தை அவர்களால் பார்க்கவே முடியாது. இந்த தவறுக்கு யார் காரணம்? எவ்வாறு இந்த தவறு நடந்தது? என்பது குறித்து தமிழக சுகாதாரத்துறை உரிய விசாரணை நடத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீண்டும் கண் ஒளி கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.