கொரொனா எப்போது முடியும்? உலக சுகாதார நிறுவனம் தகவல்

செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (23:33 IST)
கடந்த வருடம் சீனாவில் இருந்து கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட  உலக நாடுகளுக்குப் பரவியது.

கொரொனா முதல் முடிந்து தற்போது இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வரும் நிலையில் மூன்றாவது அலை செப்டரில் பரவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்தக் கொரோனா தொற்று முடிந்து எப்போது மீண்டும் உலகம் சகஜ நிலைக்கு வரும் என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளதாவது:

கொரொனா தொற்று மக்களுக்கு எளிதில் பாதிக்கக்கூடிய தன்மையால் அடுத்த சில மாதங்களுக்கு உயர்வு தாழ்வுகள் இருக்கும். உலகில் உள்ள மக்களுக்கு 70% தடுப்பூசி போட்டிருந்தால் நாடுகள் இயல்பு நிலைக்குத் திரும்புமெனவும்,  உலகில் முற்றிலும் கொரொனா முடிவடையும் நிலை வரும் 2022 ல் வர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்