ஒலிம்பிக்கில் வெண் கலம் வென்று சாதித்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புன்யா வலது முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே அவரது காயம் குணமாக 6 வாரங்கள் ஆகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளதால், நார்வேயில் வரும் அக்டோபர் 2 ல் தொடங்கும் உலக சாம்பியன் மல்யுத்தப் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.