இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து, இந்தியா முழுதுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. பின்னர் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
சமீபத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பின்னர் மாணவர் சேர்க்கையும் நடைபெற்று முடிந்தது. தனியார் பள்ளிகளில் 75,725 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் சுமார் 2,04, 379 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.