பள்ளிகள் திறக்கப்படுமா?

திங்கள், 21 ஜூன் 2021 (15:47 IST)
இந்தியாவில் வேகமாக கொரொனா இரண்டாம் அலை பரவிவருகிறது.  அனைத்து மாநிலங்களிலும் இத்தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதால் மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இநிந்லையில் தற்போது தமிழகத்தில் கொரோன வைரஸ் தொற்றுக் குறைந்து வரும் நிலையில்,  வரும் ஜூலை மாதம் பள்ளிகளில் வகுப்புகளைத் தொடங்கலாம் என தமிழக அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

 தமிழகத்தில் 2020-2021 ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த 14 ஆம் தேதியில் இருந்து நடைஎப்ற்று வருகிறது. அத்துடன் மாணவர்களுக்கு  இலவசப் பாடப் புத்தகங்களும்  பள்ளியில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வரும் ஜூலை மாதம் முதல் தமிழகப் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மேலும், மேல்நிலைவகுப்புகள் மட்டும் தற்போது தொடங்க அரசு ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்