ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், "ஒவ்வொரு குடிமகனும் மதிக்கப்பட்டு, நல்லிணக்கம் இருக்கும்போது, ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு வலுவாக நிற்கும் ஒரு இந்தியா தான் உங்கள் கனவு. தந்தையே, அந்த கனவை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வு டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் பிரியங்கா காந்தி மற்றும் ப. சிதம்பரம் உட்படப் பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பிகாரில் தேர்தல் பேரணியில் இருந்ததால் ராகுல் காந்தியால் இந்த நிகழ்வில் நேரடியாக கலந்துகொள்ள முடியவில்லை.