சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்குவது குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்பதால், இந்த முடிவுக்கு தடை விதிக்கத் தேவையில்லை என நீதிபதி சுரேந்தர் தெரிவித்தார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் சென்னை மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது. மேலும், தனியார் வசம் ஒப்படைக்கப்படும் பணியாளர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தை, சென்னை மாநகராட்சியும் அரசும் இணைந்து வழங்க வேண்டும். மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் இந்த பணிகளைத் தனியாருக்கு வழங்குவதற்கு தடை விதிக்க முடியாது" என்று கூறி, வழக்கை முடித்து வைத்தார்.