கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி என்றாலே பாஜக மாநிலத்தலைவராக தற்போது அங்கம் வகிக்கும் அண்ணாமலை, அப்போது மாநிலத்துணைத்தலைவராக இருந்த போது கடந்த சட்டசபை பொதுத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியின் பாஜக வேட்பாளராக இருந்தவர் ஆவார். முதன்முதலில் அவர் மட்டுமே பாஜக சார்பில் களமிறங்கியதோடு, ஜமாத் கூட்டமைப்பு சார்பில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை பள்ளப்பட்டிக்குள் நுழைய தடை என்றெல்லாம் போர்டுகள் வைத்து ஒட்டு மொத்த பாஜக வினையும் அங்குள்ள இஸ்லாமியர்கள் எதிர்த்து, பின்னர் அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ என்பவரை திமுக எம்.எல்.ஏ வாக ஆக்கியதற்கு பள்ளப்பட்டி மக்கள் தான் காரணம் என்று கூறினால் மிகையாகாது. அப்படி எல்லாம் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற்ற அந்த பள்ளப்பட்டி பேரூராட்சியை நகராட்சியாக மாற்றியது., இதே திமுக அரசு தான். இந்நிலையில், நேற்று முன் தினம் நடைபெற்ற வாக்குப்பதிவில், பள்ளப்பட்டி பேரூராட்சி மக்கள், முதன்முதலாக நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், மக்கள் சுறுசுறுப்பாக, அதுவும் திமுக ஆட்சியில் உற்சாகமாக வாக்களிக்க வேண்டும், ஆனால் மாவட்ட அளவில் மிகவும் குறைந்த வாக்குப்பதிவானதோடு, சென்னை மாநகராட்சியில் எப்படி வாக்கு சதவிகிதம் குறைந்த்தோ, அதே பாணியில், பள்ளப்பட்டி நகராட்சியாக முதன் முதலில் அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நகராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதல் தேர்தலில் பள்ளப்பட்டி நகராட்சி மக்கள் ஆண்கள் 15373 நபர்களுக்கு, 16193 பெண்களும், இதரர் 1 என்று மொத்தம் 31567 நபர்களது வாக்கு இருக்கையில், வாக்குபதிவானதில் 6570 ஆண் வாக்காளர்கள், பெண்களில் 9579 நபர்கள் என்றும் மொத்தம் 16149 நபர்களது வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. அதாவது சதவிகிதத்தில் 51.16 % விழுக்காடு மட்டுமே பதிவாகியுள்ளது. தமிழக அளவில் குறைந்ததற்கு காரணம், இத்தொகுதியான அரவக்குறிச்சி திமுக எம்.எல்.ஏ மொஞ்சனூர் இளங்கோ தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து இவரது செயல் எதுவுமே இல்லை, முன்பாவது, இரவு நேரத்தில் 30 நிமிடத்திற்கு ஒருமுறை, 1 மணி நேரத்திற்கு ஒருமுறை அரசு பேருந்து பள்ளப்பட்டிக்கு வந்து செல்லும், இவர் வந்த பிறகு எந்த ஒரு தனிக்கவனமும் இந்த பள்ளப்பட்டி மக்களுக்காக காட்டியது இல்லை என்கின்றனர் இஸ்லாமிய சமுதாயத்தினர்., இதுமட்டுமில்லாமல், குடிநீர் பிரச்சினை, தார்சாலை, தெருவிளக்கு என்று அனைத்து பகுதிகளிலும் இருக்கும் பிரச்சினைகளில் கூட எந்த வித கவனமும் செலுத்தாத காரணம் தான் என்றும், ஏற்கனவே நடைபெற்ற எம்.எல்.ஏ தேர்தலில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மட்டுமல்ல, வெளிநாடுகளில் இருந்தால் கூட அவர்களுக்கு விசா போட்டு வாக்களிப்பதற்காக சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு அழைத்து வந்த முன்னாள் அரவக்குறிச்சி திமுக எம்.எல்,ஏ வும், தற்போதைய மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜியும் எங்களை விட்டு விட்டார் என்று முனுமுனுத்து வருகின்றனர் இஸ்லாமிய மக்கள், இதுமட்டுமில்லாமல், ஒரு இளைஞர் அதுவும் நம்ம தொகுதிக்கு உட்பட்ட அண்ணாமலை வந்திருந்தால் கூட பரவாயில்லை என்ற அளவிற்கு தள்ளப்பட்டுள்ளனராம்.