ஹெல்மெட், சீட்பெல்ட் அணியாதவர்கள் மீது நடவடிக்கை என்ன ? நீதிபதிகள் அதிருப்தி

புதன், 24 அக்டோபர் 2018 (18:10 IST)
ஹெல்மெட் சீட் பெல்ட் அணியாதது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த விவகாரம் இன்று உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இதனையடுத்து ஹெல்மெட் விவகாரம் குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பியதாவது:
 
இரண்டு சக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்பவர் யாரும் ஹெல்மெட் அணிவது கிடையாது.ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டத்தை அமல்படுத்துவதில் அரசின் செயல்பாட்டில் அதிருப்தி அடைவதாக தெரிவித்தது.மேலும் பின் இருக்கையில் ஹெல்மெட் அணியாமல் சென்றவர்கள் மீது நடவடிக்கை அறிக்கையில் இல்லை என்று கூறியுள்ளனர்.
 
இதற்கு வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஹெல்மெட் அணிந்து செல்வதை மெதுவாகத்தான் வழக்கத்திற்கு கொண்டு வர முடியும்  என தமிழகஅரசு பதில் மனு தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்