பாமகவில் ராமதாஸ் - அன்புமணி இடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில், தன்னைக் குறித்து அன்புமணி பொய்யை பரப்புவதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் “என்னை சந்திக்க அன்புமணி வந்ததாகவும் நான் சந்திக்க மறுத்ததாகவும் அன்புமணி பொய் சொல்கிறார். அவர் என்னை பார்க்க தைலாபுரம் வீட்டிற்கு வரவில்லை. நான் கதவையும் மூடவில்லை.
சூது செய்து பாமகவை பறிக்க அன்புமணி முயற்சி செய்கிறார். கடுமையாக உழைத்து தண்ணீருக்கு பதில் வியர்வையை ஊற்றி கட்சியை ஒரு ஆலமரமாக வளர்த்துள்ளேன். ஆனால் ஆலமரக் கிளையில் அமர்ந்து கொண்டே கோடாரியை செய்து அந்த மரத்தையே வெட்ட முயல்கிறார்.
எங்கள் பிள்ளை அன்புமணிக்கு நாங்கள் என்ன குறை வைத்தோம். மிகச்சிறந்த கல்வியை கொடுத்தேன். நாடாளுமன்ற உறுப்பினார், மத்திய அமைச்சர் என பல பதவிகளில் அமர வைத்து அழகு பார்த்தேன்” என கலங்கியபடி பேசியுள்ளார்.
Edit by Prasanth.K