மேற்கு மண்டல சாரணர் பெருந்திரளணி ;பரணி பார்க் சாரண மாவட்டம் அபார சாதனை
வியாழன், 3 நவம்பர் 2022 (22:51 IST)
மேற்கு மண்டல சாரணர் பெருந்திரளணி 28.10.2022 முதல் 30.10.2022 வரை குன்னூரில் உள்ள மாநில சாரணர் பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் பரணி பார்க் சாரண மாவட்டம் அதிக போட்டிகளில் முதலிடம் பிடித்து அபார சாதனை படைத்தனர்.
இதில் கோவை, கரூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் ஆகிய 5 வருவாய் மாவட்டங்களை உள்ளடக்கிய 21 சாரணர் மாவட்டங்களிலிருந்து 400 சாரண, சாரணீயர்கள், திரி சாரண, திரி சாரணீயர்கள் பங்கேற்றனர். பரணி பார்க் சாரணர் மாவட்டம் சார்பாக சாரணர் மாவட்ட செயலர் R.பிரியா தலைமையில் 24 பேர் கொண்ட அணி கலந்து கொண்டனர்.
இப்பெருந்திரளணியில் “கலர் பார்ட்டி” பிரிவில் பரணி பார்க் சாரண அணி முதலிடமும், பாரணி பார்க் சாரணீய அணி இரண்டாமிடமும், “பாடித் தீ” போட்டியில் பரணி பார்க் சாரண அணி முதலிடமும், பாரணி பார்க் சாரணீய அணி இரண்டாமிடமும், “தனித்திறனறிதல்” போட்டியில் பரணி பார்க் சாரண அணி முதலிடமும், பாரணி பார்க் சாரணீய அணி இரண்டாமிடமும் வென்றனர்.
மேலும் பரணி பார்க் சாரண மாவட்டம், கரூர் சாரண மாவட்டம், குளித்தலை சாரண மாவட்டம் ஆகிய மூன்று சாரணர் மாவட்டங்களும் ஒன்றிணைந்து கரூர் வருவாய் மாவட்டமாக கலந்து கொண்ட சாரணர் அணி வகுப்பு, “பிசிகல் டிஸ்பிளே”, நாட்டுப்புற நடனம், சமையற்கலை, “பெஜன்ட் சோ” ஆகிய போட்டிகளில் சாரணர், சாரணீயர் இரண்டு பிரிவுகளிலும் முதலிடத்தையும் கண்காட்சி போட்டியில் இரண்டாமிடத்தையும் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஒருங்கிணைந்த கரூர் வருவாய் மாவட்டம் வென்றனர்.
வெற்றி பெற்ற பரணி பார்க் சாரண, சாரணீயர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பரணி பார்க் சாரண மாவட்டத்தின் முதன்மை ஆணையர் s.மோகனரெங்கன் மற்றும் சாரணீய ஆணையர் பத்மாவதி மோகனரெங்கன் ஆகியோர் தலைமை தாங்கி வெற்றி பெற்ற சாரண, சாரணீயர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர். பரணி பார்க் சாரண மாவட்டத்தின் துணை தலைவர் M.சுபாஷினி முன்னிலை வகித்தார். சாரணர் ஆணையர் முனைவர் C.ராமசுப்ரமணியன் , துணை ஆணையர்கள் s.சுதாதேவி, K.சேகர், ஆகியோர்கள் சாதனைப் படைத்த மாணவர்களை பாராட்டி வாழ்த்தினர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் R.பிரியா மற்றும் பரணி பார்க் சாரண மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
புகைப்படம்: வெற்றி பெற்ற சாரண, சாரணீயர்களுடன் பரணி பார்க் மாவட்ட சாரணீய ஆணையர் பத்மாவதி மோகனரெங்கன், மாவட்டத்தின் துணை தலைவர் M.சுபாஷினி சாரணர் ஆணையர் முனைவர் C.ராமசுப்ரமணியன் , துணை ஆணையர்கள் s.சுதாதேவி, K.சேகர், மாவட்ட செயலாளர் R.பிரியா மற்றும் சாரண, சாரணீய ஆசிரியர்கள்.