குன்னூர் ஹெலிகாப்டர் விபத்திற்கு காரணம் என்ன?

சனி, 15 ஜனவரி 2022 (08:24 IST)
ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த 8 ஆம் தேதி குன்னூரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானதில் முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
 
இதனைத்தொடர்ந்து விபத்துக்குள்ளான இந்த ஹெலிகாப்டரின் கருப்பு பேட்டி தேடி கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மேலும் ஹெலிகாப்டர் விபத்துக்கான காரணம் குறித்து முப்படைகளின் விசாரணைக் குழு அறிக்கை சமர்பிக்குமாறு கோரப்பட்டது. தற்போது விசாரணைக் குழு அறிக்கை சமர்பித்துள்ள நிலையில் முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
 
அதில் ஹெலிகாப்டர் விபத்திற்கு இயந்திரக் கோளாறோ, கவனக்குறைவோ காரணம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம் எனவும் எதிபாராத விதமாக ஏற்பட்ட திடீர் மேகக்கூட்டங்களுக்குள் ஹெலிகாப்டர் நுழைந்ததால் தான் விபத்து நிகழ்ந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்