மூன்று நாட்கள் அதிக வெயில், அப்புறம் இரண்டு நாள் மழை: வானிலை முன்னறிவிப்பு

Webdunia
வெள்ளி, 27 மே 2016 (13:50 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. தலைநகர் சென்னையில் அனல் காற்று வீசி வருகிறது. இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களுக்கு மேலும் வெயில் அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது.


 
 
சென்னை நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், வெப்ப சலனத்தின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறினார்.
 
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு வழக்கத்தை காட்டிலும் 1 முதல் 3 டிகிரி அளவுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளது எனவும் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கோடைமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் கூறியுள்ளார்.
 
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இரவு நேரத்தில் கோடை மழை பெய்யவும் வாய்ப்பு உள்ளது என்று பாலச்சந்திரன் கூறினார். கடல்காற்று தாமதமாக வீசுவதாலும், மேற்கிலிருந்து தரைக்காற்று வலுவாக வீசுவதாலும் வெப்பம் அதிகரிக்கும்.
அடுத்த கட்டுரையில்