ரெட் அலர்ட் விடுத்துள்ளதால் மக்கள் பீதி அடையத் தொடங்கி உள்ளனர். 2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சென்னை, கடலூர் மாவட்டங்கள் வெள்ளக்காடாக மாறியது. எனவே தற்போதைய கனமழையால் அதைப் போன்ற நிலைமை மறுபடியும் வரக்கூடாது என்று அரசு இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி மற்றும் தங்கமணி போன்றோரும் கலந்து கொண்டுள்ளனர். 32 மாவட்டங்களையும் சேர்ந்த அதிகாரிகளும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு இக்கூட்டத்தில் முதல்வரோடு ஆலோசித்து வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தமிழக அணைகளில் உள்ள நீர் அளவு, நீர் வெளியேற்றும் நேரம் போன்றவைக் குறித்து முக்கியமாக ஆலோசிக்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.