இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சார்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு ஒரு பக்கம் இதை செய்தாலும், பொதுமக்கள் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற தகவல்கள் வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஒருவகையில் அனைத்தும் பயனுள்ளதாகவும் இருக்கிறது. இன்னும் 3 நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால், முன்னெச்சரிக்கையாக நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.