திமுக குடும்பம் கொள்ளையடித்த பணத்தை மீட்போம் - பிரதமர் மோடி

Sinoj
திங்கள், 4 மார்ச் 2024 (19:44 IST)
சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்    நடைபெற்று வரும் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, '' திமுக குடும்பம் கொள்ளையடித்த பணத்தை  மீட்போம்''என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், பிரதமர் மோடி, என் மண் என் மக்கள் என்ற அண்ணாமலையில் பாத யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழகம்  வந்திருந்தார். இந்த நிலையில், இன்று மீண்டும் தமிழம் வந்துள்ளார்.

அதாவது,  தனி விமான மூலம் சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு சென்றார்
 
அங்கு, கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை அவர் பார்வையிட்டார்.. அதைத்தொடர்ந்து நந்தனம் ஒய்எம்சிஏ திடலில்  பாஜக பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்றார்.
 
தற்போது நடைபெற்று வரும்  இந்த  பாஜக பொதுகூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது;

''திமுக கொள்ளையடித்த பணத்தை மீண்டும் மக்களுக்கே சென்று சேரும். திமுக குடும்பம் கொள்ளையடித்த பணத்தை  மீட்போம். இது மோடியின் உத்தரவாதம்.   மத்திய அரசின் திட்டங்களால் கொள்ளையடிக்க முடியாமல் திமுக குடும்பமே சிக்கலில் உள்ளது'' என்று தெரிவித்தார்.
 
மேலும், ''மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு   நேரடியாக செல்வதால் அதை திமுகவால் கொள்ளையடிக்க முடியவில்லை. சென்னை    வெள்ளம் பாதிப்பின்போது திமுக அரசு சரிவர செயல்படவில்லை. சில காலம் முன்புதான் சென்னையில் புயல் தாக்கி பெருவெள்ளம் ஏற்பட்டது. ஆனால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசு  உதவிக்கரம் நீட்டவில்லை'' என்று குற்றம்சாட்டினார். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்