திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் மாணவர்களிடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.
நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தல் உள்ளிட்ட அரசு முறை பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திருவாரூர் செல்கிறார். முன்னதாக திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரி பவளவிழா ஆண்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் “இளம் மாணவர்களை சந்திக்கும்போது உற்சாகம் பிறக்கிறது. மாணவர்களுக்கு அரசியல் புரிதல் அவசியம். நீங்கள் சமூக அக்கறைக் கொண்டவர்களாக வளர வேண்டும். கோட்சே கூட்டத்தின் பின்னால் மாணவர்கள் சென்றுவிடக் கூடாது. நமக்கு காந்திய வழி, அம்பேத்கரிய வழி, பெரியார் வழி என்று ஏராளமான வழிகள் உள்ளன. நான் அரசியல் பேசவில்லை மாணவர்களுக்கு அரசியல் புரிய வேண்டும் என்பதற்காக பேசுகிறேன்.
தமிழ் சமூகத்தை அறிவு சமூகமாக உருவாக்கி பல வாய்ப்புகளை உருவாக்கி தருகிறோம். நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை கல்வி அவசியம் என்பதால் திமுக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. கல்வி கற்க பொருளாதார தடை இருக்கக் கூடாது. அதனால் மாணவர்களுக்கு பல திட்டங்களை அளித்து வருகிறோம்.
சமூக நீதி போராட்டங்களின் பிரதிபலிப்புதான் இன்று நாம் பார்க்கின்ற இந்த தமிழ்நாடு. 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் கொடுக்க இருக்கிறோம்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K