மாணவனுக்கு பெண் குரல்! அத்துமீறிய ஆங்கில ஆசிரியர்! - மாணவன் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!

Prasanth K

புதன், 9 ஜூலை 2025 (11:51 IST)

தனது குரல் பெண் போல உள்ளதால் ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக பள்ளி மாணவர் அளித்துள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சமீபமாக பள்ளி மாணவிகளுக்கு ஆசிரியர்களாலேயே பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடப்பது அடிக்கடி செய்திகளில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், கரூரில் மாணவர் அளித்துள்ள புகார் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மாணவன் “எனது குரல் பெண்களின் குரல் போல உள்ளது. அதனால் எங்கள் பள்ளி ஆங்கில ஆசிரியர் செந்தில்குமார் என்பவர் என்னிடம் ஆபாசமாக பேசுவதோடு, தொடக்கூடாத இடங்களில் தொட்டு அத்துமீறுகிறார்.

 

இது எனக்கு மனதளவில் பெரும் உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனக்கு படிக்க மிகவும் ஆசையாக இருந்தாலும், அந்த ஆசிரியரின் செயலால் எனக்கு பள்ளிக்கூடம் செல்ல பிடிக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக நான் பள்ளிக்கு செல்லவில்லை. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்