சமீபத்தில் ஒரு விழாவை பேசிய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது நாங்கள் யாரும் அவரை சந்திக்கவில்லை. அவர் இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம். எங்களை மன்னித்துவிடுங்கள். சசிகலா தரப்பு கூற சொன்னதையே நாங்கள் மக்களிடம் கூறினோம். யாரேனும் ஜெ.வை சந்தித்தால், அவர் எப்படி கொல்லப்படுகிறார் என்பதை கூறிவிடுவார் என்பதால், அவரை யாரும் சந்திக்காமல் சசிகலா தரப்பு தடுத்து வந்தது எனக் கூறியிருந்தார்.
திண்டுக்கல் சீனிவாசன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், அதற்கு முற்றுபுள்ளி வைப்பதற்காகவே செல்லூர் ராஜூ இப்படி கருத்து தெரிவித்துள்ளார். எந்த அமைச்சர்களும் ஜெ.வை சந்திக்கவே இல்லை என பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அதோடு, மக்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு அமைச்சர்கள் மாறி மாறி பேசி வருகின்றனர். அமைச்சர்களின் மாறுபட்ட இந்த ஒப்புதல் வாக்குமூலங்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, ஆட்சி மற்றும் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே இப்படி அவர்கள் பேசி வருகின்றனர் எனவும் பலர் கருத்து கூறி வருகின்றனர்.