கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்..சென்னையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்..!

Siva

ஞாயிறு, 28 ஏப்ரல் 2024 (13:34 IST)
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒருநாள் குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன் காரணமாக அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். ஏப்ரல் 30ஆம் தேதி காலை 9 மணி முதல், 1ஆம் தேதி காலை 9 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்பதால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரை சேமித்து வைக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
 
மேலும் அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் பெற http://cmwssb.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே மெட்ரோ பணி காரணமாக சென்னையின் முக்கிய பகுதிகளில் அதாவது வளசரவாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அம்பத்தூர், ஆலந்தூர், அடையாறு ஆகிய பகுதிகளில் இன்றும் நாளையும் குடிநீர் விநியோகம் சமீபத்தில் நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்