வங்கக்கடலில் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.. மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சனி, 16 டிசம்பர் 2023 (14:48 IST)
வங்கக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால்  இன்று முதல் 4 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
 மேலும் கீழடுக்கு காற்றின் சுழற்சி காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் தமிழகத்தின் பல பகுதிகளில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்