'அன்றே சொன்னார் அம்மா': வைரலாகும் ஜெயலலிதாவின் பேச்சு

வெள்ளி, 5 ஜூலை 2019 (10:06 IST)
திமுக என்றாலே அது மன்னர் பரம்பரை போல் குடும்பத்தினர்களுக்கு மட்டுமே பதவி என அரசியல் விமர்சகர்களும், பத்திரிகையாளர்களும் கிழித்து தொங்கவிட்டு கொண்டிருக்கும் நிலையில் திடீரென கட்சிக்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு இளைஞரணி செயலாளர் பதவி கொடுத்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
 
உதயநிதிக்கு கொடுத்த பதவிக்கு காரணம் சொல்லும் திமுக பிரபலங்கள் உதயநிதியின் நடிகர் என்ற நட்சத்திர அந்தஸ்து கட்சியின் வளர்ச்சிக்கு உதவும் என்கின்றனர். உதயநிதி அப்படி எத்தனை சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துவிட்டார் என்பதே நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது
 
இந்த நிலையில் ஜெயலலிதா பழைய மேடைப்பேச்சின் வீடியோ ஒன்று 'அன்றே சொன்னார் அம்மா' என்ற பெயரில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜெயலலிதா பேசியது இதுதான்: ஜனநாயக நாடுகள் அனைத்திற்கும் சென்று ஆராய்ச்சி செய்து பாருங்கள், எந்த நாட்டிலாவது தகப்பன் முதலமைச்சர், மகன் துணை முதலமைச்சர், மற்றொரு மகன் மத்திய அமைச்சர், பேரன் மத்திய அமைச்சர், மகள் நாடாளுமன்ற உறுப்பினர், மகளின் மனம் கவர்ந்தவர் மத்திய அமைச்சர் என்று ஒரே குடும்பம் ஜனநாயகத்தின் பெயரால் இத்தனை பதவிகளை ஆக்கிரமித்து கொண்டு அழுக்கை தின்ற மீன்களை போல, அதிகாரத்தை குதறி தின்கின்ற இதுபோன்ற குடும்பம் ஒன்று உலகத்தின் எந்த மூலையிலாவது இருக்கிறதா?" என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
 
இந்த நிலையில் உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு திமுக மாணவர் அணி தலைவர் பதவி கொடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

அன்றே சொன்னார் அம்மா. https://t.co/prUA8FIkSq pic.twitter.com/kum5gRq6Qa

— AIADMK (@AIADMKOfficial) July 4, 2019

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்