பதவி அல்ல பொறுப்பு; விமர்சகர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் டிவிட்!

வெள்ளி, 5 ஜூலை 2019 (08:39 IST)
திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டதை அடுத்து பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. 
 
திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பின் தலைவர் பொறுப்பை அவரது மகன் முக ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில் தற்போது முக ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு திமுகவின் இளைஞரணி செயலாளர் பதவி கிடைத்துள்ளது.
 
இது குறித்து கட்சிக்குள் மறைமுகமாகவும், வெளியில் வெளிப்படையாகவும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. திமுக வாரிசு அரசியலை மையப்படுத்தி செயல்படுவதாகவும், கட்சியின் அடிமட்டத்தில் இருந்து தொண்டு செய்து வந்தவர்களுக்கு எந்தவித பதவியும் கொடுக்காமல், ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதியை வைத்து உதயநிதிக்கு பதவி கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு டிவிட் போட்டுள்ளார். அதில், இயக்கத்தின் அடித்தளம் இளைஞர்கள். அந்த இளைய சக்தியை ஒருங்கிணைக்கும் கடமையை கண்ணியத்துடனும் கட்டுப்பாட்டுடனும் செய்வேன். 
 
இது பதவி அல்ல பொறுப்பு என்பதை உணர்ந்து உன்னதமான செயல்பாடுகளின் மூலமாக கழக வெற்றிகளுக்கும், திராவிட இயக்க கொள்கைகளுக்காகவும் பாடுபட உறுதி ஏற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 
 
அதோடு நேற்று பேட்டியில், திமுகவில் நான் எந்த பதவியையும் நான் எதிர்பார்க்கவில்லை. வாரிசு அரசியல் என்ற விமர்சனத்திற்கு என்னுடைய செயல்பாடு தக்க பதிலடியாக இருக்கும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்