தமிழக எல்லையில் பரவி வரும் பறவை காய்ச்சல்

Webdunia
வெள்ளி, 13 மே 2016 (15:31 IST)
கர்நாடக மாநிலத்தில் உள்ள சில கிராமங்களில் பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லையான ஒசூர் சோதனை சாவடியில் மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் முகமிட்டு உள்ளனர்.


 

 
கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டத்தில் உள்ள ஹாம்நாத், மோகராகி உள்ளிட்ட கிராமங்களில் பறவை காய்ச்சல் நோய் பரவி வருகிறது.
இதனால் கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு வரும் கோழி மற்றும் கோழித் தீவனம் ஆகியவை கிருமி நாசினி மருந்து தெளித்து அனுப்பப்படுகிறது.
 
பறவை காய்ச்சல் நோய் தமிழகத்திற்குள் பரவாமல் இருக்க தமிழக எல்லையான ஒசூர் சோதனை சாவடியில் மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் முகமிட்டு உள்ளனர். 
 
இவர்கள், வெளிமாநிலங்களில் இருந்து, தமிழகத்திற்கு கோழி, முட்டை, கோழித் தீவனங்கள் மற்றும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களை ஏற்றி வரும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சோதனையிடுகின்றனர். 
 
இதுகுறித்து கால்நடைத்துறை மருத்துவர் கூறியதாவது:-
 
கோழி மற்றும் முட்டை கொண்டு வரும் வாகனம் மட்டுமின்றி, காய்கறி உள்ளிட்ட இதர பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கும் கிரிமி நாசினி மருந்து தெளிக்கிறோம். இதனால் தமிழகத்தில் பறவை காய்ச்சல் நோய் பரவுவதை முற்றிலுமாக தடுக்கப்படும்’ என்றார். 
 
மேலும், வாகனங்களின் டயர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பறவை காய்ச்சல் நோய் கிருமிகளை அழிக்கும் வகையில், கிருமி நாசினி மருந்தினை தெளித்து வருகின்றனர்.
 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்