கஞ்சா வழக்கில் கைதான பாமக நிர்வாகி: வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள்

Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2018 (20:28 IST)
விஜய் நடித்த 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் சிகரெடி பிடித்து கொண்டிருப்பது போன்ற ஸ்டில்லுக்கு பாமகவின் அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்தார். நடிகர்கள் சமூக அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் விஜய் தனக்கு கொடுத்த வாக்குறுதியை மீறிவிட்டார் என்றும் கூறியிருந்தார்

இந்த நிலையில் சமீபத்தில் பா.ம.க.வைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கஞ்சா விற்று கொண்டிருந்தபோது கையும் களவுமாக போலீஸில் சிக்கியுள்ளார். அந்த நபர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், புகையிலைக்கு எதிராக குரல் கொடுக்கும் கட்சியின் நிர்வாகியே கஞ்சாவை விற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தி வெளியானதும் சமூக வலைத்தளங்களில் களமிறங்கிய விஜய் ரசிகர்கள் அன்புமணியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். முதலில் உங்கள் கட்சியில் உள்ளவர்களை திருத்துங்கள் அதன்பின்னர் அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுங்கள் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்