திமுக தலைவர் கருணாநிதிக்கு விஜயகாந்த் பிறந்தநாள் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 2 ஜூன் 2017 (09:50 IST)
திமுக தலைவர் கருணாநிதி இன்று தனது 94-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாள் மற்றும் சட்டசபை வைரவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.


 
 
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கலைஞர் அவர்களின் 94 -வது பிறந்தநாளும், சட்டபேரவையின் 60-வது ஆண்டு விழா கொண்டாடும் மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு எனது பிறந்தாள் வாழ்த்துக்களையும், சட்டபேரவையின் வைரவிழா ஆண்டுக்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இந்தியாவிலேயே மிக மூத்த அரசியல் தலைவர் என்ற பெருமைக்குரியவராக இன்றைக்கு இருக்கிறார் என்றால் கலைஞர் மட்டும்தான். அதுபோல் எத்தனையோ அரசியல்வாதிகள் இருந்தாலும், கலைஞருடைய அரசியல் அனுபவம், அரசியல் தலைவர்களுடைய வயதும் சமமாக இருக்கக்கூடிய நிலையில், உங்களுடைய பிறந்தநாளும், சட்டபேரவையின் வைரவிழாவும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இன்னும் பல ஆண்டுகள் ஆரோக்கியத்துடன் இருந்து மக்களுக்கும், நாட்டுக்கும் சேவை செய்ய வேண்டும் என மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார் விஜயகாந்த்.
அடுத்த கட்டுரையில்