தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளரும், நடிகருமான விஜயகாந்த் சில வருடங்களாக உடல் நலக் குறைவு காரணமாக அவஸ்தைப்பட்டு வருகிறார். கடந்த தேர்தலிலும், மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போதும், அவரால் பேச முடியவில்லை.
பின்னர், நடிகரும், விஜயகாந்தின் நண்பருமான ரஞ்சித், தனது பதிவில், விஜயகாந்த் சிறந்த மனித நேயப்பண்பாளர், மக்களுக்காக எவ்வளவோ செய்துள்ளார். ஆனால் அவருக்கு கண்பார்வை சரியாகத் தெரியவில்லை என்பதை உணராத மக்கள் அவர் மதுகுடித்து வந்து பேசுவதாக தவறாக பேசுவதாகவும் வேதனையுடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விஜயகாந்தின் பள்ளிகால நண்பர் சங்கர் என்பவர் விஜயகாந்த்திற்கு அக்குபஞ்சர் முறையில் சிகிச்சை அளித்து வருகிறார். அதில், அவர் உடல் நிலை தேறி வருவதாகவும், விரைவில் பூரண குணம் பெற்று பழைய விஜயகாந்த் கம்பீரமாக வருவார் என கூறியுள்ளார்.