களையெடுக்கும் விஜயகாந்த் : தேமுதிக தொழிற்சங்க பேரவை செயலாளர் நீக்கம்

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (21:22 IST)
தேமுதிக தொழிற்சங்க பேரவை செயலாளர் எம்.சவுந்திராபாண்டியனை கட்சியின் பதவியிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விஜயகாந்த் நீக்கியுள்ளார்.


 

 
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தேமுதிக இணைப்பு அமைப்பான தேசிய முற்போக்கு தொழிற் சங்க பேரவை செயலாளர் எம்.சவுந்திரபாண்டியன் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாலும் கட்சிக்கே களங்கம் ஏற்படும் வகையில் செயல்பட்டமையாலும்,கழகத்தின் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்தின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையிலும் நடந்து கொண்டதால், அவர் வகித்து வந்த பேரவை தொழிற் சங்க செயலாளர் பதவியில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார். 
 
இவருடன் பேரவை தொழிற்சங்க நிர்வாகிகள், மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள் என யாரும் எந்தவிதமான தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்