காவலர்களா? கயவர்களா?: போலீஸை விளாசும் விஜயகாந்தின் வீடியோ

Webdunia
புதன், 25 ஜனவரி 2017 (16:06 IST)
மெரீனவில் காவல்துறை அராஜகத்தை கண்டித்து தென்னவன் படத்தில் தான் பேசிய வசனம் வீடியோவையும், காவல்துறையினர் வாகனங்களும் தீயிடும் வீடியோவையும் விஜயகாந்த தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


 

 
ஜல்லிக்கட்டுக்கான போராட்டத்துக்கு ஆதரவு குரல் கொடுத்த அனைவரும் மெரீனாவில் காவல்துறையினர் நடத்திய கலவரத்தை கண்டித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் காவல்துறையினர் அராஜகத்தை குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
தென்னவன் படத்தில் தான் பேசிய ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் காவல்துறையினர் அராஜகத்துக்கு ஒத்துப்போகும் வகையில் உள்ளது. அதில், மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டுய நீங்கள், ஆளும் கட்சி சொல்வத கேட்டு செயல்படுகிறீங்க. நீ போடுற துணி, சாப்பிடுர சாப்பாடு அனைத்தும் இந்த அப்பாவி மக்களோட வரிப்பணத்துல தான். இப்படி போனா நாடு எப்படி உருப்படும். இதுபோன்று தெறிக்கவிடும் வசனங்கள் அடங்கிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 
அடுத்த கட்டுரையில்