தொடரும் விஜயகாந்த்தின் அதிரடி - புதிய பொறுப்பாளர்கள் நியமனம்

Webdunia
திங்கள், 11 ஜூலை 2016 (12:27 IST)
தேமுதிகவின் தென் சென்னை மாவட்ட கழக பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 

 
இது குறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தேசிய முற்போக்கு திராவிட கழகம் தென் சென்னை மாவட்ட கழக பொறுப்பாளர்களாக வி.சி.ஆனந்தன், (தி.நகர் பகுதிச் செயலாளர்), பிரபாகரன் இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.
 
இவர்களுக்கு மாவட்ட, பகுதி, வட்ட, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், கழக தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து கழகம் சிறப்பான வளர்ச்சிபெற பாடுபடுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்