விஜயகாந்த் மகனும் தேர்தலில் போட்டியா? பிரேமலதா சொல்வது என்ன?

Siva

வியாழன், 8 பிப்ரவரி 2024 (08:57 IST)
திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய மூன்று கூட்டணிகளிலும் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி வந்தாலும் கிட்டத்தட்ட திமுக கதவை அடைத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். 
 
திமுக கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் அப்படியே இருப்பதால் அங்கு இடமில்லை என்பதால் தேமுதிக அந்த கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. 
 
தேமுதிக 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி என்ற நிபந்தனையுடன் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் 14 தொகுதிகளை அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே கொடுக்காது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
அதிமுக தரப்பிலும் பாஜக தரப்பிலும் மூன்று தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்றும் பாஜக,  ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளதாக தெரிகிறது.
 
இந்த நிலையில் அதிகபட்சமாக தேமுதிகவுக்கு மூன்று தொகுதிகள் கிடைக்கும் என்று கூறப்படும் நிலையில் பிரேமலதா, அவருடைய மகன் விஜயபிரபாகர்ன் மற்றும் சகோதரர் சுதீஷ் ஆகிய மூன்று பேர்கள் மட்டுமே பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று கூறப்படுவதால் தேமுதிகவும் குடும்ப கட்சியா என்ற கேள்வி எழுந்துள்ளது
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்