கடந்த ஏப்ரல் மாதம், அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர் பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ரூ.89 கோடி அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதரங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். ஆனால், விஜயபாஸ்கர் மற்றும் நடிகர் சரத்குமார் ஆகியோர் வருமான வரித்துறையினருக்கு சரியான ஒத்துழைப்பை அளிக்கவில்லை.