இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார் விஜய பிரபாகரன்.. மறு வாக்கு எண்ணிக்கையா?

Siva

புதன், 12 ஜூன் 2024 (11:50 IST)
விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விருதுநகர் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என மனு அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மதியம் 3.30 மணியளவில் மனு அளிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது.
 
விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடைபெற்றதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியிருந்தார். மறு வாக்கு எண்ணிக்கை கோரி, ஏற்கனவே தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 385256 வாக்குகளும், விஜய பிரபாகரன் 380877 வாக்குகளும் பெற்றிருந்த நிலையில் 4379 வாக்குகள் மட்டுமே வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்