மகன் விஜய பிரபாகரன் தொகுதியில் இழுபறி.. தியானத்தில் உட்கார்ந்த பிரேமலதா..!

Mahendran

செவ்வாய், 4 ஜூன் 2024 (14:30 IST)
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வரும் நிலையில் விருதுநகர் தொகுதியில் கேப்டன் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் ஆரம்பத்தில் முன்னிலையில் இருந்தாலும் தற்போது திடீரென பின்னடைவில் இருப்பதாகவும் அங்கு காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் முன்னிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
மதிய இரண்டு முப்பது மணி நிலவரப்படி விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பெற்ற வாக்குகள் 211352 என்பது குறிப்பிடத்தக்கது 
 
தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பெற்ற வாக்குகள் 207434  ஆகும். இந்த தொகுதிகள் போட்டியிட்ட நடிகை ராதிகா 85588  வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென விஜய பிரபாகரன் பின்னடைவில் சென்று உள்ளதை அடுத்து விஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானம் வழங்கிய பிரேமலதா தற்போது தியானம் செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்