நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது ஊக்கத்தொகையை வழங்கும் போது, ஒரு சிலருக்கு மட்டுமே அதுவும் அ.தி.மு.க வினருக்கு மட்டுமே உதவித்தொகைகள் மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட ரக நூல்கள் கைத்தறி நெசவு செய்ய வருவதில்லை என்று கூறியும், கைத்தறிக்கு வந்த நூல்கள் விசைத்தறிக்கு செல்வதாகவும், கூறியும், நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வேண்டியும் அமைச்சரை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே அமைச்சரை முற்றுகையிட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.