இந்நிலையில், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், “அண்ணை மொழி காப்போம், அனைத்து மொழியும் கற்போம். தமிழன் என்று சொல்லடா! தலைநிமிர்ந்து நில்லடா” என்ற வாசகங்கள் அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து இந்தி மொழிக்கு ஆதரவான தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில், நாங்கள் எந்தவொரு குறிப்பிட்ட கட்சியையும் காப்பியடிக்கவில்லை. நாங்கள் அவர்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலும் இல்லை. ஆனால், அவர்கள் தமிழக இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள். எனவே, அதற்கான எதிர்ப்பை அவர்களது பாணியில் காட்ட விரும்பினோம் என பதிவிட்டுள்ளார்.
இதற்கு அவர் கடும் கண்டனங்களையும் கேலி கிண்டலையும் பதிலடியாக பெற்று வருகிறார். லூசு பயனா இருப்பான் போல, எந்த சித்தாந்தமும், கொள்கையும், கோட்பாடும் இல்லாம அரசியலை வியாபாரமா பார்த்தால் அப்படித்தான்டா தெரியும் எனவும் எதற்கு ஹிந்திய எதிர்கிறாங்கனு தெரிந்து கொள்ளுங்க எல்லாத்துக்கும் பிஜேபி ஆதரவு நிலை இருந்தால் 2019 முடிவு தான் வரும் தேர்தலிலும் எனவும் விமர்சனம் செய்து வருகின்றனர்.