இந்த நிலையில் ஒரு வருடம் நிறைவு பெற்றதற்கு அவரது கட்சி தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், பிற அரசியல் கட்சி தலைவர்கள் சில கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இது குறித்து கூறியதாவது:
ஒவ்வொருவருக்கும் ஒரு பாணி உண்டு அது போல விஜய்க்கு தொலைநோக்கில் தான் அரசியல் செய்ய வேண்டும், Work From Home மற்றும் இணையதளத்தில் தான் பணி செய்ய வேண்டும் களத்தில் இறங்க வேண்டாம் என நினைத்தால் ஒன்றும் செய்ய முடியாது"