தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் கோகுலகிருஷ்ணன் (17), செகுவேரா (21), சீனு (17). இவர்கள் மூவரும் மில்லர்புரம் எனும் பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை முகாமுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் மீது டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
சம்மந்தப்பட்ட அந்த வீடியோ போலிஸாரின் கவனத்துக்கு வர, அவர்களைத் தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மாணவர்கள் என்பதாலும் இனிமேல் இதுபோல் செய்யமாட்டோம் என வேண்டிக் கேட்டுக் கொண்டதாலும் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்காமல் போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியைச் செய்ய வேண்டும் என்று தண்டனை வழங்கியுள்ளார்.