விக்டோரியா விடுதி இனி கொரோனா வார்ட் !

சனி, 10 ஏப்ரல் 2021 (13:42 IST)
சென்னை மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தொடங்கியது

 
தமிழகத்தில் 5441 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,20,827 பேராக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் கொரொனாவால் 1752 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மொத்த பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 2,61,072  ஆக அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில், சென்னை மாநிலக் கல்லூரியின் விக்டோரியா விடுதியை கொரோனா வார்டாக மாற்றும் பணி தொடங்கியது. என்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்