உடுமலை சங்கர் கொலை வழக்கு; உச்சநீதிமன்றத்தை நாடிய தமிழக அரசு!

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2020 (09:17 IST)
உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சாதி மீறி காதல் திருமணம் செய்து கொண்டதற்காக உடுமலைப்பேட்டை சங்கர் என்பவரை அவரது மனைவி கவுசல்யாவின் உறவினர்கள் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கவுசல்யாவின் அப்பா சின்னசாமி உட்பட 6 பேர் குற்றவாளிகளாய் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்கில் சில மாதங்களுக்கு முன்பு தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம் கவுசல்யா தந்தை சின்னசாமியை விடுதலை செய்ததுடன், மற்ற 5 பேரின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் குறைத்து தீர்ப்பளித்தது.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இதுகுறித்த விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்