இதுபற்றி செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வெற்றிவேல் “தேர்தலுக்காக இந்த வீடியோவை நாங்கள் வெளியிடவில்லை. நான் அவ்வளவு மலிவான நபர் கிடையாது. இந்த வீடியோ போல் எங்களிடம் மேலும் பல ஆதாரங்கள் உள்ளன. ஜெ.வை எங்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்கலாம் என அமைச்சர்கள் விவாதித்த வீடியோவும் எங்களிடம் இருக்கிறது. ஜெயலலிதா நன்றாக இருந்தார் என்பது தர்ம யுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்-ஸ்க்கு தெரியும். ஜெ.வின் மரணம் தொடர்பாக நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் எங்களிடம் கேட்டால் அவர்களிடம் அனைத்து ஆதாரங்களையும் அளிக்க தயாராக இருக்கிறோம்” என அவர் தெரிவித்தார்.