ஓபிஎஸ் அணியை விட்டுச் சென்ற வீணை காயத்திரி

Webdunia
வெள்ளி, 3 மார்ச் 2017 (17:03 IST)
தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வீணை காயத்திரி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி சசிகலா அணியில் இணைந்தார். 


 

 
ஓ.பன்னீர்செல்வம் அணி சசிகலாவிடம் இருந்து அதிமுக கட்சியை கைப்பற்ற தொடர்ந்து போராடி வருகிறது. ஓ.பி.எஸ் அணி 12 எம்.பி.க்கள், 11 எம்.எல்.ஏ.க்கள் என குறைந்த எண்ணிக்கை உடைய அணியாக உள்ளது. இருந்தும் அதிமுக மூத்த நிர்வாகிகள் அனைவரும் ஓ.பி.எஸ் அணியில்தான் உள்ளனர்.
 
காலை இரண்டு முக்கிய நிர்வாகிகள் ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி அதிமுக துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் இணைந்தனர். அதைத்தொடர்ந்து தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வீணை காயத்திரி ஓ.பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகியுள்ளார்.  
 
மேலும் சசிகலா தரப்பு அணியில் இருந்து 60க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஓ.பி.எஸ். அணிக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்